இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஹென்றீசியன் சங்கமம் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 2023ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான கொளரவிப்பு, பழைய மாணவர்வளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி மற்றும் பழையமாணவர் ஒன்றுகூடலும்
இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பிரான்ஸ் பழைய மாணவர் சங்க தலைவர் திரு. யொசி அல்போன்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஒய்வுபெற்ற ஆசிரியர்களான கலாவித்தகர் திரு. விஜயகுமார் மற்றும் சமாதான நீதவான் திரு. பிஜன்வெனு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin