யாழ். மறைமாவட்ட குருவும் புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபருமான அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் குருத்துவ அபிசேக வெள்ளிவிழா மற்றும் அப்போஸ்தலிக்க கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரி மேரி விமலினி அவர்களின் நித்திய அர்ப்பண வெள்ளி விழா நிகழ்வுகள் 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றன.
அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து அருட்தந்தை மற்றும் அருட்கோதரிக்கான கௌரவிப்புக்களும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், உறவினர்கள், பங்குமக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.