பொதுநிலையினர் வலுவூட்டலை நோக்காகக்கொண்டு கிளறேசியன் சபை விவிலிய பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய மாநாடு 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
‘விவிலியப்பார்வையில் செபம்’ என்னும் கருப்பொருளில் பணியக இயக்குநர் அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகளும் குழு ஆய்வுகளும் இடம்பெற்றன.
கண்டி மறைமாவட்ட குருமுதல்வரும், அம்பிட்டிய தேசிய குருமட விவிலிய கற்றை நெறி விரிவுரையாளரும், கத்தோலிக்க விவிலிய ஒன்றியத்தின் உருப்பினருமான அருட்தந்தை அல்வின் பெர்னாண்டோ, கிளறேசியன் சபை அருட்தந்தை தேவராஜன் பீரிஸ் மற்றும் கொழும்பு மறைமாவட்ட குருவும் LIVING FAITH இதழின் ஆசிரியருமான அருட்தந்தை உதயதாஸ் அருளானந்தம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து ‘விவிலியத்தில் செபம்’; ‘இயேசு கற்பித்த செபம்’ ‘விவிலிய செபத்தின் வாழ்வியல்’ என்னும் தலைப்புக்களில் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு பிரதிநிதிகள், பொதுநிலையினரென பலரும் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin