யாழ்ப்பாணம் YMCA கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் மாவட்ட நிலையில் சாதனை புரிந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை YMCA மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழவில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை தமிழ்த்துறை ஆசிரியர் லலீசன் தலைமையில் “இணையவழி கற்கை முறை மாணவர்களுக்கு நன்மையா தீமையா” என்ற தலைப்பில் விவாதப் போட்டி இடம்பெற்றது. இவ் விவாதப் போட்டியில் கொக்குவில் இந்துக்கல்லூரியை எதிர்த்து புனித பத்திரிசியார் கல்லூரி போட்டியிட்ட நிலையில் இணைய வழி கற்கை தீமையே என விவாதித்த புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றி பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.