மனிதத்தை நேசித்து, வீழ்ந்தோரைத் தூக்கிவிடுவோம்! நேராக யோசித்து, புது வாழ்வில் பயணிப்போம்! கூட்டு முயற்சியினை முன்னெடுத்து, குவலயத்தில் சுடர்விடுவோம்! எனும் நோக்கங்களைக்கொண்டு மாற்றம் அறக்கட்டளை அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட வாழ்வியற்றிறன் அபிவிருத்திக் கற்கைநெறி 21ஆம் திகதி திங்கள் தொடக்கம் 25ஆம் திகதி வெள்ளி வரை நாவலர் வீதியில் அமைந்துள்ள மாற்றம் அறக்கட்டளை மையத்தில் நடைபெற்றது.
இக்கற்கை நெறியில் யாழ். மாவட்டத்திலிருந்து 27பேரும் வவுனியா, மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து 13பேரும் கலந்து பயனடைந்த நிலையில் அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பகத்தில் அமலமரித்தியாகிகள் துறவற சபையின் யாழ். மாகாண முதல்வர் அருட்திரு இயூயின் பெனடிக்ற் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.