அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா அவர்களின் ‘வழிபாடு வாழ்வாகுமா’ எனும் வழிபாட்டு இறையியல் நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை அவர்களின் தயார் நூலை வெளியிட்டுவைக்க நூல் அறிமுக உரையை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் வழங்கினார்.

அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் மற்றும் அருட்தந்தை ஜெபரட்ணம் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும் கொழும்பு புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி தமிழ் பிரிவு இயக்குநர் அருட்தந்தை றெஜினோல்ட் லூசியன் அவர்கள் சிறப்பு விருத்தினராகவும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன், சொமஸ்கன் சபை இந்திய மாகாண முதல்வர் அருட்தந்தை அக்னல் அமலன், மன்னார் மறைமாவட்ட வழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அன்ரன் தேவராஜ், யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி. மேரி வினிபிறிடா சுரேந்திரராஜா, கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி யோசப்பின் யாளினி பிரேம்நாத்,   Royal flour mills நிறுவன நிர்வாக இயக்குநர் திரு. பாலநாதன் பிரசாந் ஆகியோர் கௌரவ விருத்தினர்களாகவும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin