யாழ் ரெனிஸ் வலைப்பந்து கழகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட ரெனிஸ் தினம் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.


யாழ் ரெனிஸ் கழகத் தலைவர் அருட்திரு திருமகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண உடற்கல்வி-உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ராஜசீலன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள 20 பாடசாலைகளில் இருந்து தற்போது ரெனிஸ் பயிலும், புதிதாக ரெனிஸ் பயில விரும்பும் 10 வயதுக்குட்பட்ட 200 மாணவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

By admin