யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் பொது நிலையினர் மறைபரப்பு சபையின் யாழ். மறைமாவட்ட அங்கத்தவர்களுக்கான தவக்காலத் தியானம் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
மறைபரப்பு சபை இயக்குநர் அருட்தந்தை சேவியர் அருண அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், நற்கருணை ஆராதனை திருப்பலி இடம்பெற்றன.
இத்தியானத்தில் 150 வரையான பொதுநிலை அங்கத்தவர்கள் பங்குபற்றினார்கள்.