யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 27ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் தியோகுப்பிள்ளை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு சமூக வலைத்தளமூடாக நடாத்தப்பட்ட தனிப்பாடல் மற்றும் பாலன்குடில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் தெல்லிப்பளை வைத்தியசாலை வைத்திய அதிகாரி திருமதி. கிறிஸ்ரா நிசாந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொது மக்களென பலரும் கலந்துகொண்டனர்.
இம்முறை நடைபெற்ற கரோல் தனிப்பாடல் போட்டியில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் கொழும்பு ஆகிய இடங்களிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் 170வரையானவர்களும் கிறிஸ்மஸ் குடில் போட்டியில் 30வரையானவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இப்போட்டிகள் மறை அலை தொலைக்காட்சியினால் மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாவது தடவையாக நடைபெற்றுள்ளதுடன் இப்போட்டிகளில் ஏராளமானவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin