யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் ஆரம்பிக்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு கடந்த 05ஆம் திகதி வியாழக்கிழமை இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் மறைநதி கத்தோலிக்க ஊடகமையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இவ்வருடம் வட்ஸ் அப் சமூக வலைத்தள செயலியூடாக ஊடக மையத்தால் முன்னெடுக்கப்ட்ட தவக்கால பசாம் போட்டியில் பங்குபற்றி பற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் யாழ் மறை அலை தொலைக்காட்சியில் வாராந்தம் ஒளிபரப்பப்படும் வினா விடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் இந்நாளின் சிறப்பு நிகழ்வாக மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக தடம்பதிக்கும் மறைநதி ஊடகமையத்திற்கான எழுச்சிக்கீத வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றதுடன் இவ் ஊடக மையத்தில் பணியாற்றும் மற்றும் உதவிபுரியும் நலன்விரும்பிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து மறைநதி ஊடகமையத்திற்கான கீதத்தை வெளியிட்டுவைத்தார். இக்கீதம் வழிபாட்டு நிலைய இயக்குனரும் கரம்பன் பங்குத்தந்தையுமான அருட்தந்தை தயாகரன் அவர்களின் எழுத்துருவில் அவரால் மெட்டிடப்பட்டு இசையமைப்பாளர் திரு யோசப் அன்ரனி யேசுதாஸ் அவர்களின் இசையில் உருவானது.
இலங்கை வங்கியின் பிரதான வீதி கிளை முகாமையாளர் திரு. றெனோல்ட் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.