யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆண்டுவிழா கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சேனை தலைவி சகோதரி புளோறன்ஸ் றஞ்சினி நீக்லஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருப்பலியும், பேராலய மண்டபத்தில் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அரங்க நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைக்கோட்ட முதல்வரும் பேராலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் ஒன்றுகூடல் நிகழ்வில் கியூரியா அங்கத்தவர்களால் கலை நிகழ்வுகளும் முன்நாள் ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் 550ற்கும் அதிகமான மரியாயின் சேனை கியூரியா அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

By admin