யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக உப தலைவர் திரு. லக்ஸ்மன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வருகின்ற 24ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்த பொதுநிலையினர் மாநாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
தீவக மறைக்கோட்டக் பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்கள் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்.