மன்னார் மருதமடு அன்னையின் திருச்சுருபம் யாழ். மறைமாவட்டத்தின் பருத்தித்துறை மறைக்கோட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு கடந்த 17ஆம் திகதி தொடக்கம் பங்குரீதியாக மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு திருப்பலிகளும் நற்கருணை ஆராதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வணக்க நிகழ்வுகளிலும் அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் வழிபாடுகள் மற்றும் சிறப்பு ஆராதனைகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மதவேறுபாடின்றி பங்குபற்றி அன்னையின் திருச்சுருபத்தை தரிசித்து அன்னையின் ஆசி பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து நாளைய தினம் அன்னையின் திருச்சுருபம் நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு பங்குகளுக்கு எடுத்துச் செல்லபடவுள்ளதுடன் 22ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மக்கள் வணக்கத்திற்காக கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளிற்கு எடுத்துச்செல்லப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.