யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்களுக்கான ஓன்றுகூடல் நிகழ்வு 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைதத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்ரீபன் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் முல்லை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கல்வி நிலைய இயக்குனரும் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் புதிய இயக்குனருமாகிய அருட்திரு யேம்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தனது புதிய பணிப்பொறுப்பபையும் ஏற்றுக்கொண்டார். யாழ். மறைமாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடன் அளம்பில் பங்கு இளையோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.