யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன.

அருட்தந்தை இராஜசிங்கம் அவர்கள் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வராகவும் முல்லைத்தீவு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் கொழும்புத்துறை மற்றும் நல்லூர் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் சுண்டுக்குளி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அஜந்தன் அவர்கள் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்கள் சிலாவத்தை பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்கள் சுன்னாகம் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அகஸ்ரின் அவர்கள் உரும்பிராய் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்கள் நாரந்தனை பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அலின் கருணாகரன் அவர்கள் குமுழமுனை பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை றெனால்ட் அவர்கள் தர்மபுரம் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை பத்திநாதர் அவர்கள் கோப்பாய் மற்றும் திருநெல்வேலி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்கள் சில்லாலை பங்குத்தந்தையாகவும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வரதன் குருஸ் அவர்கள் மணியந்தோட்டம் பங்குத்தந்தையாகவும் நற்கருணைநாதர் சபை அருட்தந்தை ஞானநேசன் அவர்கள் விளான் பங்குத்தந்தையாகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

அத்துடன் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்கள் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநராகவும் அருட்தந்தை நிதர்சன் அவர்கள் பேராலய உதவிப்பங்குத்தந்தையாகவும் நியமனம் பெற்றுள்ளதுடன் அருட்தந்தை பிறாயன் அவர்கள் உயர் கல்விற்காக இந்தியாவிற்கும் பயணமாகவுள்ளார்.

By admin