யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன.
அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் யாழ். மறைக்கோட்ட முதல்வராகவும் பேராலய பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை பெனற் அவர்கள் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வராகவும் பரந்தன் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை கிருபாகரன் அவர்கள் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வராகவும் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை தயாபரன் அவர்கள் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி அதிபராகவும் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனராகவும் அருட்தந்தை நீக்லஸ் அவர்கள் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய ஆன்மீக குருவாகவும் நியமனம் பெற்றுள்ளனர்.
அத்துடன் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் கொழும்புத்துறை பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை யேசுதாஸ் அவர்கள் பண்டத்தரிப்பு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை மொன்பேர்ட் அவர்கள் நல்லூர் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை SJQ ஜெயரஞ்சன் அவர்கள் மிருசுவில் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அலின் கருணாகரன் அவர்கள் கோப்பாய் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அன்ரனிபாலா அவர்கள் திருநெல்வேலி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை ஞானறூபன் அவர்கள் மாரீசன்கூடல் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் சுண்டுக்குளி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் பாசையூர் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை விஜின்ரஸ் அவர்கள் கரவெட்டி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை யஸ்ரின் ஆதர் அவர்கள் தாழையடி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை ஞானேந்திரன் அவர்கள் சாவகச்சேரி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்கள் ஊர்காவற்துறை பங்குத்தந்தையாகவும் நியமனம் பெற்றுள்ளனர்.
மேலும் அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்கள் உருத்திரபுரம் பங்கின் பதில் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை றெனால்ட் அவர்கள் சுன்னாகம் பங்கின் பதில் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை கமல்ராஜ் அவர்கள் பேராலய உதவிப் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அன்ரன் கஜீஸ்காந்த் அவர்கள் குருநகர் உதவிப் பங்குத்தந்தையாகவும் நியமனம் பெற்று தமது பணிப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.