யாழ். போதனா வைத்தியசாலையின் கண்ணியல் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்கோதரி அழகேஸ்வரி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கண்வைத்திய நிபுணர் திரு. மலரவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினாராக கலந்து ஆசிச்செய்தி வழங்கினார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், வைத்தியசாலை பணிப்பாளர் திரு. சத்தியமூர்த்தி, வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள், நோயாளர்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin