கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட பரதநாட்டிய போட்டி கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாவகச்சேரி இந்து கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் டெலைனோ கீழ்ப்பிரிவு தனிநடன போட்டியில் முதலாமிடத்தையும் செல்வன் கிசோன் பிரிவு 2 தனிநடன போட்டியில் முதலாமிடத்தையும் செல்வன் தேனுயன் பிரிவு 1 தனிநடன போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட சிங்கள நாட்டார் பாடல் போட்டி கடந்த 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 6 – 9 ஆம் தர பிரிவினர் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

மேலும் இலங்கை தேசிய ரெனிஸ் சம்மேளனத்தின் ஒழுங்குபடுத்தலில் Kandy Garden கழகத்தினால் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட ரெனிஸ் போட்டி கடந்த 18ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பச்சை பந்து அணியினர் Consolation A Division தொடரில் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin