யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி திருவிழா 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி அதிபர் அருட்திரு திருமகன் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது.
திருநாள் திருப்பலியை அமலமரித் தியாகிகளின் யாழ். மாகாண முதல்வர் அருட்திரு இயூயின் பெனடிக்ற் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார். இத்திருப்பலியில் குருக்கள், துறவியர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். திருப்பலியை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட மாநாட்டு அறை திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. அருட்திரு றெஜி றாஜேஸ்வரன் அவர்கள் அறையை ஆசீர்வதிக்க அருட்திரு இயூஜின் பெனடிக்ற் அவர்கள் அதனை திறந்து வைத்தார். தொடர்ந்து காலை உணவும் இந்நாளை சிறப்பிக்கும் விளையாட்டு நிகழ்வுகளும் அங்கு நடைபெற்றன.