யாழ். திருக்குடும்பக் கன்னியர்மடத் தேசிய பாடசாலையின் ஆங்கில தின விழா 29ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ம. திருவரங்கன் அவர்கள் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் ஆங்கில மொழி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக சேக்ஸ்பியரின் றோமியோ யூலியற்” வரலாற்று நாடகமும் மேடையேற்றப்பட்டு பலரது பாராட்டினையும் பெற்றுக்கொண்டது.