யாழ் கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக்கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 10 ஆம் திகதி கடந்த புதன்கிழமை அங்கு நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப்போட்டிக்கு புனித பத்திரிசியார் கல்லூரியின் உபஅதிபர் அருட்தந்தை மகன் அலோசியஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள்.
அருட்சகோதரர்களால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளில் குருக்கள் துறவியர் குருமட பணியாளர்கள் சிறிய குருமட மாணவர்கள் என பலரும் கலந்து நிகழ்வுகளை கண்டு கழித்தனர்.