யாழ். அடைக்கல அன்னை ஆலய புனித வின்சன் டி போல் பந்தியின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த மாதம் 25ஆம் திகதி அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாண்டியன்தாழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட புனித வின்சன் டி போல் மத்திய சபை ஆன்ம இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும், மத்திய சபை செயற்குழு உறுப்பினர்களும், அயற் பந்திகளின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்.