யாழ்ப்பாணம் குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித அலோசியஸ் கொன்சாகா பீடப்பணியாளர் மன்றவிழா 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்றைய தினம் காலை சிறப்பு திருப்பலியும், திருப்பலி நிறைவில் பீடப்பணியாளர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட வினாவிடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் தொடர்ந்து மாலை பீடப்பணியாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வும் நடைபெற்றன.
காலை திருப்பலியை உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் மாலை ஒன்றுகூடல் நிகழ்வில் பங்குத்தை அருட்தந்தை யாவிஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் திருப்பலிகளுக்கு தவறாமல் வருகைதந்த பீடப்பணியாளர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.