அளம்பில் சுவாமி தோட்ட வளாகத்தில் அமையப்பெறவுள்ள மொன்போர்ட் அருட்சகோதரர்களின் மொன்போர்ட் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
இலங்கை மொன்போர்ட் துறவற சபை முதல்வரும் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச பாடசாலை அதிபருமான அருட்சகோதரன் மரியபிரகாசம் அவர்களின் தலைமையில் அளம்பில் சுவாமி தோட்ட இயக்குனர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் அடிக்கல்லை ஆசீர்வதிக்க மொன்போர்ட் அருட்சகோதரர்களின் திருச்சி மாகாண முதல்வர் அருட்சகோதர் இருதயம் அவர்கள் அதனை நாட்டிவைத்தார்.
இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், குளுனி அருட்சகோதரிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்தியாவிலிருந்து வருகை தந்து தீவகம் அல்லைப்பிட்டிப் பிரதேசத்தில் சர்வதேச பாடசாலையொன்றை அமைத்து கல்விப் பணியாற்றிவரும் மொன்போர்ட் அருட்சகோதர்கள் தங்களின் பணிகளை விஸ்தரிக்கும் நோக்கோடு “மொன்போர்ட் இல்லத்தை” அமைக்கவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.