யாழ்ப்பாணம் தீவகம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் இயங்கிவரும் மொண்பேர்ட் சர்வதேச பாடசாலையின் 2024 – 25ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முன்பள்ளி தொடக்கம் தரம் 02 வரையான வகுப்புக்களில் மாணவர்களை சேர்க்க விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பபடிவங்களை எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் பாடசாலை அலுவலகத்தில் பெற்றுக்கொன்டு விண்ணப்பிக்க முடியுமென கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் மரியபிரகாசம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரம் வாய்ந்த இப்பாடசாலையில் தற்போது 270ற்கும் அதிகமான மாணவர்கள் தரம் 05வரை கற்றுவருவதுடன் 20ற்கும் அதிகமான ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.
இப்பாடசாலை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் மொண்பேர்ட் துறவற சபை அருட்சகோதரர் மரியபிரகாசம் அவர்களின் வினைத்திறன்மிக்க நிர்வாகத்தில் யாழ். கத்தோலிக்க திரு அவையில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச பாடசாலை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.