முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு தமிழர் தாயக பகுதிகளில் பரவலாக நடைபெற்றுள்ளன.
கடும் யுத்தம் நிலவிய 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினரின் ஏற்பாட்டில் கஞ்சி கொட்டில்கள் அமைக்கப்பட்டு ஒருவேளை உணவாக கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
கடும் யுத்தம் நிலவிய அந்தக்காலத்திலும் மக்களின் பசியாற்றும் முகமாக அங்கு வழங்கப்பட்ட இக்கஞ்சி மக்களின் அவல நிலையை சித்தரிக்கும் நினைவுப்பதிவாக அமைந்துள்ளது.
இதன் நினைவாகவே இக்கஞ்சி பரிமாறும் செயற்பாடு பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலியை தொடர்ந்து சிறப்பாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.