முல்லைத்தீவு பங்கில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தமர்வு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஏற்பாட்டில் 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு பங்கைச் சேர்ந்த 165 வரையான மாணவர்களும் மறையாசிரியர்களும் கலந்து கொண்டனர்.இக்கருத்தமர்வில் கருத்துரைகளும் குழுவிளையாட்டுக்களும் விவிலிய போட்டிகளும் இடம்பெற்றன.