யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முதியோர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து முதியோருக்கான மகிழ்வூட்டல் நிகழ்வுகளும் அவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

ஓய்வுநிலை அருட்தந்தை தேவசகாயம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்ததுடன் 50க்கும் அதிகமான முதியோர் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

By admin