அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் “மாறிய எனது பாதை மாற்றியவர் யாரோ” நூல் அறிமுக நிகழ்வு 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையும் மாங்குளம் நலநோம்பு மைய இயக்குநருமான அருட்தந்தை அன்புராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைக்க நூலுக்கான ஆய்வுரையை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், உளவளத்துணையாளரும் எழுத்தாளருமான திருமதி கோகிலா மகேந்திரன் மற்றும் நிகழ்வின் சிறப்பு விருந்தினரான யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து ஸ்ரீ சற்குணராசா ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக், திருக்குடும்ப கன்னியர் மட யாழ். மாகாண முதல்வி அருட்சகோதரி தியோபின் குருஸ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நூல் அருட்தந்தையின் வாழ்க்கை கதையோடு ஆரம்பித்து அதனூடான படிப்பினைகளை ஆன்மீக, உளவியல் சிந்தனைகளாக தொகுத்து பிரபஞ்ச ஆன்மீகத்தினுடான இவரின் வாழ்வின் இறுதி அத்தியாயத்தை வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளது.