மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலை மாணவிகள் 2023,24 கல்வியாண்டில் இணைபாடவிதான செயற்பாடுகளில் வெற்றிபெற்று கௌரவிப்புக்களை பெற்றுள்ளார்கள்.
மாணவி செல்வி வைஸ்ணவி நிறோஜியன் அவர்கள் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய இலக்கிய விழா கவிதை ஆக்கப் போட்டியில் முதலாமிடத்தை பெற்று 20ஆம் திகதி கொழும்பு அலரி மாளிகையில் தேசிய இலக்கிய விருதை பெற்றுக்கொண்டதுடன் செல்வி. அஸ்வினி செல்வக்குமார் இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் கட்டுரைப் போட்டியில் முதலாமிடத்தை பெற்று வருகின்ற 23ம் திகதி திங்கட்கிழமை கொழும்பு இராமகிருஸ்ணன் மண்டபத்தில் விருது பெறவுள்ளார்.
அத்துடன் மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தரம் 06 மாணவர்களுக்கான ஆங்கில சொல்வதெழுதுதல் போட்டியில் பங்குபற்றிய செல்வி. சர்மிகா ஆனந்தவேல் அவர்கள் மாகாணமட்டத்தில் முதலாமிடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியள்ளார்.