மன்னார் மறைமாவட்டத்தின் மாந்தை மற்றும் மடு மறைக்கோட்டங்களில் பணியாற்றும் மறைவாழ்வு பணியாளர்களுக்கான தியானமும் ஒன்றுகூடலும் கடந்த 19ஆம் 26ஆம் திகதிகளில் நடைபெற்றன.
மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை றொக்சன் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை அடம்பன் தாமரைக்குளம் புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் மாந்தை மறைக்கோட்ட பணியாளர்களுக்கு நடைபெற்ற தியானத்தில் அருட்தந்தை பெனி அவர்கள் கத்தோலிக்க மறைவாழ்வு பணியாளர்களின் சுய அடையாளம்: வாழ்வும் பணியும் என்னும் தலைப்பிலும் திரு. மரியதாசன் பரமதாசன் அவர்கள் மறைவாழ்வு பணியாளர்களாகிய நாம் கிறிஸ்துவின் செபம் மற்றும் பணிவாழ்வு மனநிலையில் வளர்வோம் என்னும் தலைப்பிலும் கருத்துரை வழங்கினார்கள்.
இந்நிகவில் மாந்தை மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 96 மறைவாழ்வு பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
அத்துடன் 26ஆம் திகதி சனிக்கிழமை மடு மறைக்கோட்ட மறைவாழ்வு பணியாளர்களுக்கு மடுறோட் பங்கு புனித சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் நடைபெற்ற தியானத்தில் திருச்செபமாலை, நற்கருணை வழிபாடு என்பனவற்றுடன் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களால் கத்தோலிக்க மறைவாழ்வு பணியாளர்களின் சுய அடையாளம்: வாழ்வும் பணியும் என்னும் தலைப்பிலும் திருமதி பெப்பி விக்டர் லெம்பேட் அவர்களால் தற்கால சூழமைவில் மறையாசிரியர்களும் அவர்களின் ஆன்மீகமும் என்னும் தலைப்பிலும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மடு மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 52 மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.