மல்லாகம் புனித சதாசகாய அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜூன் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 29ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து அன்றைய நாளை சிறப்பிக்கும் முகமாக ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்தானமுகாம் அங்கு நடைபெற்றதுடன் இவ் இரத்ததான முகாமில் 72 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தனர்.