யாழ். பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக கிறிஸ்தவ நாகரிகத்துறையும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான கருத்தமர்வு 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.

‘பின்நவீனத்துவ சமுதாயப் பின்னணியில் மறைக்கல்வி’ எனும் கருப்பொருளில் கிறிஸ்தவநாகரிகத் துறைத்தலைவர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் தலைமையில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் உதவியுடன் இக்கருத்தமர்வு இடம்பெற்றது.

இக்கருத்தமர்வில் ஓய்வுநிலை SLAS சிரேஸ்ட அதிகாரி திரு. இரேனியஸ் செல்வின் அவர்கள் வடக்கின் சமகால சமூகநிலை: ஒரு பின் நவீனத்துவ பார்வை என்னும் தலைப்பிலும், யாழ். பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர் கலாநிதி நித்லவர்ணன் அவர்கள் சமகால பின்நவீனத்துவ சமுதாயப் பின்னணியில் கற்றலும் கற்பித்தலும் என்னும் தலைப்பிலும், யாழ். பல்கலைக்கழக கல்வித்துறை பேராசிரியர் திருமதி. இராசநாயகம் அவர்கள் கட்டிளமைப்பருவ மாணவர்களும் சமயக்கல்வியும் என்னும் தலைப்பிலும், ஆசிரிய ஆலோசகரும் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனருமான திரு. ஜோண்சன் ராஜ்குமார் அவர்கள் கலைவழி மறைக்கல்வி: கற்பித்தல் ஊடகமாக கலைகள் – என்னும் தலைப்பிலும் கருத்துரைகள் வழங்கினார்கள்.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, கலைப்பீடாதிபதி திரு. றகுறாம், பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர்களான அருட்தந்தை இரவிச்சந்திரன், செல்வி வினிபிறீடா சந்திரசேகர், அருட்தந்தையர்களென பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பங்குபற்றிய மறையாசிரியர்களுக்கான சான்றிதழ்கள் குருமுதல்வர் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டதுடன் இக்கருத்தமர்வில் யாழ். மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 110 வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin