யாழ் மறைமாவட்டத்தின் மல்லாவிப் பங்கின் துணைப் பங்கான வவுனிக்குளத்தில் தவக்கால தியானத்திற்கான கல்வாரிப் பூங்கா புதிதாக புனரமைக்கப்பட்டு 10.2.2017 வெள்ளிக்கிழமை அன்று மறைமாவட்டத்தின் குருமுதல்வர் அருடத்தந்தை யோசப் ஜெபரெட்ணம் அடிகளாரால் திறந்துவைக்கப்பட்டது.
இதில் பல குருக்களும், அருட்சகோதரிகளும், அரச அதிகாரிகளும், பாராளமன்ற உறுப்பினரும் மற்றும் பங்கு இறைமக்களும் கலந்துகொண்டனர்.
கல்வாரி பூங்கா திறந்துவைக்கப்பட்டு சிலுவைப்பாதைத் தியானம் நடாத்தப்பட்டு இறுதியில் திருப்பலியுடன் அன்றைய நிகழ்வு நிறைவுற்றது.
இவ் கல்வாரிப் பூங்கா தவக்காலத்தில் சிறப்பான முறையில் தவக்கால யாத்திரைத் தலமாக பயன்படுத்தப்படும் என்றும், இதனுடைய எதிர்கால வளர்ச்சிக்கு அனைவரது ஒத்துழைப்பும் இருக்கவேண்டுமென்றும் குருமுதல்வர் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.