கனடா மிசிசாகா புனித பற்றிமா அன்னை தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட “மறைகாத்த மாவீரன்” தென்மோடி நாட்டுக்கூத்து ஆற்றுகை கடந்த மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை இரண்டாம் ஜோன் பவுல் Polish கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
பணியக இயக்குநர் அருட்தந்தை கனிசியஸ் ராஜ் கைமர் பீலிக்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மேடையேற்றப்பட்ட இந்நாட்டுக்கூத்தை கனடா திருமறைக்கலாமன்ற கலைஞர்களான திரு. அன்ரனி குயின் கொன்சன்ரைன் மற்றும் திரு. செபஸ்ரியன் மைக்கல்ராஜ் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.
ஆன்மீக பணியக வளர்ச்சிக்காகவும் நிதி சேகரிப்புக்காவும் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் கனடா ரொறன்ரோ உயர் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை பிரான்சிஸ் லீயோ அவர்கள் பிரதம விருந்தனராக கலந்து கொண்டதுடன் அருட்கலாநிதி யோசப் சந்திரகாந்தன், பேராசிரியர் இளையதம்பி, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், நலன்விரும்பிகள், இறைமக்களெக பலரும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
அத்துடன் பணியக பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 02 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.