மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலய மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை அந்தோனி மரியதாசன் குரூஸ் றொக்ஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளுடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விவிலிய வினாவிடை போட்டியில் 100 புள்ளிகளை பெற்ற மாணவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மறையாசிரியர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மறையாசிரியர்கள், கல்விசார் பிரமுகர்களென 300 ற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.