மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி தேர்வு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை அந்தோனி மரியதாஸன் குருஸ் றொக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மற்றும் வவுனியா நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட இப்பரீட்சைக்கு 13000 ற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
கொரோனா தொற்று மற்றும் காகித தட்டுப்பாடு போன்ற காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த இப்பரீட்சை 5 ஆண்டுகள் பின்னர் மீண்டும் இவ்வருடம் நடாத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.