டிச. 6. மன்னார் மறைமாவட்டத்தில் இறைபதமடைந்த குருக்கள் துறவியருக்கான புதிய கல்லறைத் தோட்டம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரைகாலமும் இறந்துபோன குருக்கள் துறவியரின் உடல்கள் மன்னார் பொது சேமக்காலையில் புதைக்கப்பட்டிருந்தன. ஆனால் பலர்: இறைபதமடைந்த குருக்கள் துறவியருக்கான புதிய கல்லறைத் தோட்டத்தை அமைக்கும் ஆலோசனையை முன்வைத்தனர். அதன்படி சில ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார் பொதுக் கல்லறைத் தோட்டத்திற்கு அருகில் பெறப்பட்ட புதிய இடத்தில் இது அமைக்கப்பட்டு அண்மைக் காலங்களில் இறந்த குருக்கள், துறவியரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. மன்னார் பொதுக் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த 06 அருட்பணியாளர்களினதும், 05 அருட்சகோதரிகளினதும், 04 அருட்சகோதரர்களினதும் கல்லறைகள் (04.12.2017) திங்கட்கிழமை சட்டரீதியாக மன்னார் நீதிமன்றத்தில் பெறப்பட்ட அனுமதியின்படி மன்னார் நீதிபதி மேன்மைமிகு அலெக்ஸ்ராஜா முன்னிலையில், மன்னார் நீதிமன்ற பொறுப்பு வாய்ந்த பணியாளர்கள், மன்னார் நகரசபைச் செயலாளர் திரு பிறிற்றோ லெம்பேட் மற்றும் நகரசபை; பணியாளர்கள், பொலிசார் , மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை ஏனைய அருட்பணியாளர்கள், அருட்சகோதரர்கள், அருட் சகோதரிகள், உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கூடியிருக்க தோண்டப்பட்டு அதற்குள் இருந்த உடற்பாகங்கள் புதிய இடத்தில் அமைக்கப்பட்ட புதைகுழிகளில், மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு புதைக்கப்பட்டன.
நன்றி – arudkadal.com