மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி நிலையத்தால் முன்னெடுக்கப்படவுள்ள தவக்கால திருப்பாடுகளின் ஆற்றுகையில் பங்குபற்றுவோருக்கான தவக்கால தியானம் கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை கலையருவி மண்டபத்தில் நடைபெற்றது.
கலையருவி இயக்குநர் அருட்தந்தை டக்லஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தை மறைமாவட்ட விவிலிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்களும் இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களும் நெறிப்படுத்தினார்கள்.
இத்தியானத்தில் 30 வரையான கலைஞர்கள் பங்குபற்றினர்.