மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தகவல் தொழினுட்பவியல் கற்கைநெறிக்கு அனுசரணை வழங்கும் நெதர்லாந்து Wild Ganzen நிறுவன இயக்குநர் மறியற் அவர்கள் கற்கைநெறியின் பலன்களை கண்டறியும் நோக்கோடு வாழ்வுதயம் நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின் போது கடந்த மாதம் 20ஆம் திகதி புதன்கிழமை மன்னார் வாழ்வுதயம் கரித்தாஸ் நிறுவனத்தை தரிசித்து அங்கு இக்கற்கைநெறியில் ஈடுபடும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வு வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.