மன்னார் கரித்தாஸ் – வாழ்வுதய வளாகத்தில் அமைந்துள்ள சிற்றாலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் கலந்து சிற்றாலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.