மண்டைதீவு பங்கில் புனரமைப்புச் செய்யப்பட்டுவந்த பங்குப்பணிமனை கட்டட வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அக்கட்டடதிறப்பு விழா பங்குத்தந்தை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் தலைமையில் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலைத் திருப்பலியை தொடர்ந்து யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் பங்குப்பணிமனையை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இப்பங்குப் பணிமைனை பங்கு மக்களின் நிதி அனுசரணையுடன் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் தற்போது காட்சிதருகின்றது.