மணல்காடு பங்கிலுள்ள குடத்தனை பொற்பதி புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கு ஆயத்தம் செய்யும் முகமாக முன்னெடுக்கப்பட்ட புனிதரின் திருச்சொருப பவனி 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனிதரின் திருச்சொருபம் ஊருக்குள் பவனியாக எடுத்துவரப்பட்டு வலய ரீதியாக வழிபாடுகள் இடம்பெற்று மக்களுக்கு ஆசீர் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி அங்கு நடைபெற்றுவருகின்றன.