மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல 215ஆவது வருட திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 16ஆம் திகதி நற்கருணவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அருட்தந்தை கிங்ஸ்லி றொபேட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் திருச்சிலுவை பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.