நெடுந்தீவு பங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகா ஞானொடுக்கத்திற்கான ஆரம்ப நிகழ்வு 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித யுவானியார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருஅவையின் கொடி, திருத்தந்தையின் கொடி மற்றும் அனைத்து ஆலயங்களின் கொடிகள் ஏற்றப்பட்டு அமல மரித்தியாகிகள் துறவற சபையின் மறையுரைஞர் குழுமத்தின் முதல்வர் அருட்திரு கமலநாதன் அவர்கள் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஆரம்ப நாள் நிகழ்வில் அருட்பணி சபையினர், அனைத்து ஆலயங்களின் அன்பியங்களின் வலயங்களின் நிர்வாகத்தினர், அமல மரித்தியாகிகள் துறவற சபையினை சேர்ந்த குருக்கள் மற்றும் அருட்சகோதரிகள் இறைமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து ஏனைய நிகழ்வுகள் அங்கு நடைபெற்றுவருகின்றன.