பொன் அணிகள் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 106 வது துடுப்பாட்டப் போட்டி கடந்த 24ஆம் 25ஆம் திகதிகளில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நாணயச் சுழற்சி முறையில் துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி முதல் சுற்றில் 09 இலக்குகளை இழந்து 272 ஒட்டங்களைப் பெற்றது.
தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்ததாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 70 ஒட்டங்களைப் பெற்றது.
தொடர்ந்து இரண்டாவது சுற்றில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 179 ஒட்டங்களைப் பெற்ற நிலையில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி இத்துடுப்பாட்ட போட்டியில் ஒரு சுற்றினாலும் 23 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றது.
பொன் அணிகள் போர் என அழைக்கப்படும் இத் துடுப்பாட்டப் போட்டித் தொடர் வருடம் தோறும் நடைபெற்று வரும் நிலையில் இம்முறை 106 வது தடவையாக நடைபெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.