மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.
பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் தலைமைதாங்கி திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் கல்லறைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தொடர்ந்து நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஆயரின் உருவச்சிலைக்கு சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.