போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் துறவற சபையை சேர்ந்த அருட்சகோதரிகள் பூநகரி, பள்ளிக்குடா பிரதேச மக்களின் மேம்பாட்டை நோக்காகக்கொண்டு முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு 17ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அங்கு நடைபெற்றது.
திருக்குடும்ப துறவற சபையின் கிளைகளை உள்ளடக்கிய பீற்றர் பியன்வெனு நோஆய் குழுவின் 22 அங்கத்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து குடும்ப தரிசிப்பு, இளையோர் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிகழ்வுகளின் இறுதியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் மக்கள் தமது வீட்டு வளாகத்தில் நடுவதற்கான பயன்தரு மரங்களும் வழங்கவைக்கப்பட்டன. இந்நிகழ்வுகள் பூநகரி பங்குத்தந்தை அருட்திரு சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.