புல்லாவெளி புனித செபஸ்ரியார் ஆலய வருடாந்த திருவிழா கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
04ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரசாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியின் ஆரம்பத்தில் புல்லாவெளி புனித செபஸ்ரியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரசாசம் அவர்களால் ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.