புன்னாலைக்கட்டுவன் புனித இராயப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவும் ஆலய வருடாந்த திருவிழாவும் பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியின் ஆரம்பத்தில் ஆலய வளாகத்ததின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்து புனித இராயப்பர் வரவேற்பு சுருபம் ஆயர் அவர்களினால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. தொடர்ந்து ஆலய நூற்றாண்டு விழா நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக நூற்றாண்டுவிழா நினைவு மலர் வெளியீடு இடம்பெற்றதுடன் நிகழ்வுகளின் இறுதியில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லும் ஆயர் அவர்களால் நாட்டிவைக்கப்பட்டது.